ஆலோசனை சொல்லவில்லையா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டுக் காட்டும் ஸ்டாலின்!!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்த எந்தவிதமான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் சொல்லவில்லை. அரசு நடவடிக்கைகளை குறை கூறிக்கொண்டே மட்டும் இருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து தான் கூறிய ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ”அறிக்கைகளைப் படித்துவிட்டு, ஆலோசனைகளைச் செயல்படுத்த அவருக்கு மனசு இல்லை என்றுதான் இதுவரைக்கும் நினைத்துக்கொண்டு இருந்தேன். அடுத்தவர் ஆலோசனைச் சொன்னால் அதைப் புரிந்துகொள்ளக் கூட அவரால் முடியவில்லையென்று இப்போதுதான் தெரிகிறது. கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி
 

ஆலோசனை சொல்லவில்லையா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டியலிட்டுக் காட்டும் ஸ்டாலின்!!எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்த எந்தவிதமான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் சொல்லவில்லை. அரசு நடவடிக்கைகளை குறை கூறிக்கொண்டே மட்டும் இருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து தான் கூறிய ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

”அறிக்கைகளைப் படித்துவிட்டு, ஆலோசனைகளைச் செயல்படுத்த அவருக்கு மனசு இல்லை என்றுதான் இதுவரைக்கும் நினைத்துக்கொண்டு இருந்தேன். அடுத்தவர் ஆலோசனைச் சொன்னால் அதைப் புரிந்துகொள்ளக் கூட அவரால் முடியவில்லையென்று இப்போதுதான் தெரிகிறது.

கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்?

கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்?

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?

பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்?

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?

மின் கட்டணத்தில் சலுகையும், கால நீட்டிப்பும் கொடுங்கள் என்று சொன்னது யார்?

நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள், சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்?

கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்?

பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்?

இவ்வளவையும் சொன்னது நான் தான்.

ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி.

 

காரணம் சொல்கிறவர், காரியம் செய்ய மாட்டார் என்று சொல்வார்கள். அப்படித்தான் பழனிசாமி தன்னுடைய இயலாமைக்கு ஏதாவது காரணம் தேடிக்கொண்டு இருக்கிறார். இவரால் எதுவுமே செய்ய முடியாது. கையாலாகாதவர் என்பதைத் தினமும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்,”

இவ்வாறு  அறிக்கை மூலம் அரசுக்கு தான் முன் வைத்த ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

A1TamilNews.com

 

From around the web