அமெரிக்க ஊடகங்களில் ரஜினி அரசியல்…

வாஷிங்டன்: ரஜினியின் அரசியல் அறிவிப்பு, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறது. ஊடகங்களைக் கண்டு தான் தனக்கு பயம் என்று சொன்னார் ரஜினி.. ஆனால் உலக அளவில் ரஜினிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஜப்பான், சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பெரிய செய்தியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கிய ஊடகங்களான சிஎன்என், ஏபிசி, வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ், யுஎஸ் நியூஸ் உள்ளிட்ட தேசிய அளவிலான ஊடகங்களும்,
 

அமெரிக்க ஊடகங்களில் ரஜினி அரசியல்…

வாஷிங்டன்: ரஜினியின் அரசியல் அறிவிப்பு, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறது. ஊடகங்களைக் கண்டு தான் தனக்கு பயம் என்று சொன்னார் ரஜினி.. ஆனால் உலக அளவில் ரஜினிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

ஜப்பான், சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பெரிய செய்தியாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கிய ஊடகங்களான சிஎன்என், ஏபிசி, வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ், யுஎஸ் நியூஸ் உள்ளிட்ட தேசிய அளவிலான ஊடகங்களும், உள்ளூர் ஊடகங்களிலும் தெற்காசிய செய்திகளில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியின் வருகையும், இதுவரையிலும் உலக ஊடகங்களின் கவனத்தைப் பெற்றதே இல்லை. ரஜினி என்பவர் வெறும் நடிகர் அல்ல, தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய ஆளுமை என்பதற்காகவே, அமெரிக்க ஊடகங்கள் இந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

[ See image gallery at a1tamilnews.com]

From around the web