சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ்

கடலும் மலையும் – தீவுப் பயணம் 15 புதன்கிழமை காலையிலேயே எழுந்து விட்டோம். அவசர அவசரமா ப்ரேக்ஃபாஸ்ட் பேக் பண்ணிட்டு, குளிச்சி ரெடியாயிட்டோம். நண்பர் அவருடைய காரை எடுத்து வந்தார். ஆறரை மணி அளவில் கிளம்பினோம். ரூட் 3 வழியாக கிழக்கு நோக்கிப் பயணம். வழியில் கரீபியன் கடலை யொட்டி, மலைப்பாதை.. அந்தக் காலை நேரத்தில் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நின்னு போட்டோ எடுக்கக்கூட நேரமில்லை. பின்னர் சற்று சமவெளியில் இறங்கி மேற்கு நோக்கிச் சென்றோம்.
 
கடலும் மலையும் – தீவுப் பயணம் 15
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  வியேக்கஸ்
 
புதன்கிழமை காலையிலேயே எழுந்து விட்டோம்.  அவசர அவசரமா ப்ரேக்ஃபாஸ்ட் பேக் பண்ணிட்டு, குளிச்சி ரெடியாயிட்டோம். நண்பர் அவருடைய காரை எடுத்து வந்தார். ஆறரை மணி அளவில் கிளம்பினோம். ரூட் 3 வழியாக கிழக்கு நோக்கிப் பயணம். வழியில் கரீபியன் கடலை யொட்டி, மலைப்பாதை.. அந்தக் காலை நேரத்தில் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நின்னு போட்டோ எடுக்கக்கூட நேரமில்லை. பின்னர் சற்று சமவெளியில் இறங்கி மேற்கு நோக்கிச் சென்றோம். 
 
வழி முழுவதும் ஆங்காங்கே கடலும் மலையும் அருகருகே இருந்தது, பின்னர் மலைப்பாதை, சமவெளி எனச் சென்று நாங்கள் அடைந்த இடம் ஃபஹார்டோ. அங்கே ஒரு ஃபெர்ரி ஹார்பர் அருகே காரை நிறுத்தினார் நண்பர். நாங்கள் இறங்கிச் சென்று ஃபெர்ரி டிக்கெட் எடுத்தோம். நண்பர் காரை பார்க் செய்து விட்டு வந்து சரியான டிக்கெட் வாங்கினோமா என்று சரிபார்த்து, ஃபெர்ரி நிற்கும் இடத்தைக் காட்டினார். அலுவலகம் செல்ல திரும்பிப் போய்விட்டார்.
 
சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பு. பயணிகள் ஏறத் தொடங்கினார்கள். நாங்களும் ஏறி மேல் டெக்கில் அமர்ந்தோம். ஃபெர்ரி செல்லத் தொடங்கியது. அட்லாண்டிக் கடலின் நடுவே வேகம் எடுத்தது.  நீரைக் கிழித்துக் கொண்டு  செல்லும் ஃபெர்ரி அழகு தனி. அலைகள் இருந்த இடத்தில் தண்ணீர் ஃபெர்ரி உள்ளேயும் பீச்சி அடித்தது. 
 
வழியில் ஒரு குட்டித்தீவு தென்பட்டது. ஆள் ஆரவம் இல்லாத அழகானத் தீவு. மீனவர்கள் மட்டும் அவ்வப்போது தங்கிச் செல்வார்களாம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருக்கலாம். ஃபெர்ரியின் வேகம் குறைந்தது. தூரத்தில் கரை தென்பட்டது. மலைப் பகுதிகள் கடலுக்குள் இருந்து பார்க்க புது அழகுடன் தெரிந்தது
 
கடலுக்குள் பயணித்து வரும் போது,  கரை தென்பட்டதும், ஒரு வித சிலிர்ப்பு தான். பத்திரமாக வந்து விட்டோம் என்ற நினைப்பு போல. ஒரு சிலர் பயணம் முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர்..நல்லவேளையாக எங்கள்யாருக்கும் கடல் அலர்ஜி இல்லை. கொண்டு வந்திருந்த ப்ரேக்ஃபாஸ்ட்-ஐ ஃபெர்ரியில் பயணித்துக் கொண்டே சாப்பிட்டோம். 
 
கரை வந்தாகிவிட்டது. இறங்கினோம். வந்து இறங்கியது போர்ட்டோ ரிக்கோவைச் சார்ந்த ஒரு குட்டித் தீவு. பெயர் வியேக்கஸ். முழுக்க முழுக்க சுற்றுலாத் தளம். அங்கே பூர்வக் குடிமக்களும் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை மிகக்குறைவு. சுற்றுலாத் தொழில் சார்ந்த ஊழியர்கள் குடும்பங்கள் தான் அதிகம்.
 
கரை இறங்கியதும், அங்கே எங்களுக்கான டெம்போ ட்ராவலர் வேன் நின்று கொண்டிருந்தது. வியேக்கஸில் ஒரு ரிசார்ட்டில் ரிசர்வ் செய்து இருந்தார் நண்பர். அந்த ரிசார்ட்டின் வேன் தான் எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தது. ரிசார்ட்டை சென்றடதைந்தோம்.
 
அட்லாண்டிக் கரையோரம் ப்ரைவேட் பீச்சுடன் அமைந்த ரிசார்ட் அது. என்ன, எங்களை செக் இன் செய்யத் தான் கொஞ்சம் லேட் பண்ணி விட்டார்கள். அது வரையிலும் லாபியிலும், வெளியே தோட்டத்திலும் நின்று கடலையும் அலையையும் கண்டு ரசித்தோம். 
 
நான்காவது மாடியில் பீச் பக்கமான அறை கிடைத்தது. அருமையான செலக்‌ஷன். உடனடியாக நண்பருக்கு போன் செய்து, வந்து சேர்ந்து விட்டோம் என நன்றி சொன்னோம். பிள்ளைகள் இருவரும் அசதியில் படுத்து விட்டனர். நானும் மனைவியும் பால்கனியில் நின்று வெளியே எட்டிப் பார்த்தோம்.
 
ரிசார்ட் முழுவதுக்கும் பீச் இருக்கிறது. அடுத்த ரிசார்ட்க்கும் இந்த ரிசார்ட்டுக்கும் இடையே பீச்சில் சின்ன தடுப்பு போல் வைத்திருந்தார்கள். பீச்சில் ஒரு பக்கம் அடல்ட் பகுதி, இன்னொரு பக்கம் ஃபேமிலி பகுதி என பிரித்து இருந்தார்கள்.
 
அடல்ட் பக்கம் கொஞ்சம் அப்படி இப்படித் தான் மக்கள் இருந்தார்கள். யாரும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவரவர் துணையுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள். ஆ என்று அலறிவிட்டேன். மனைவி தான் கிள்ளி விட்டார். அங்கே என்ன பார்வை என்ற கேள்வியை கேட்காமல் கேட்டு விட்டார். 
 
பசங்க தூங்குறாங்க.. கீழே நாமளும் அங்கே போய் வரலாமான்னு கேட்டதும், அய்ய.. ஆசைப்பாருன்னு சிணுங்கல். அட போங்கப்பா..இதுக்கு தான் புள்ளைங்களை அப்பா, அம்மா, மாமா அத்தைன்னு பாதுகாப்பா விட்டுட்டு வரணும் போல..இன்னும் அங்கே நின்று கொண்டிருந்தால் ஆபத்து என்று உள்ளே வந்தேன். கொஞ்ச நேர ஒய்வுக்குப் பின் மதிய உணவுக்கு கீழே எல்லோரும் இறங்கினோம்.
 
வகை வகையான சீ ஃபுட்ஸ், சிக்கன், ஃபீஃப் மற்றும் சில வெஜிட்டேரியன் வகையான உணவுகள் இருந்தது. சாப்பிட்டுட்டு, பிள்ளைகளுடன் அங்கே இருந்த தோட்டப்பகுதியில் சென்று பார்வையிட்டோம். ஹாமக்குகள் இருந்தது. ஏறி படுத்துக் கொண்டோம். போட்டோ எடுத்தோம். 
 
அப்பா பீச் என்றான் சின்னவன். ஃபேமிலி பீச் பக்கம் போய் கொஞ்ச நேரம் அட்லாண்டிக் கரையோரம் அலைகளுடன் விளையாண்டோம். நேரம் நான்காகி விட்டது.  வாங்க, அறைக்குச் சென்று ரெடியாகனும் என்று அழைத்துச் சென்றேன்.
 
ஐந்தரை மணி வாக்கில் இன்னொரு வேன் ரிசார்ட்டுக்கு வந்தது. நால்வரும் குளியலுக்கு தயார் என்பது போல் ஏற்ற உடையணிந்து கையில் ஆளுக்கொரு டவலுடன் சென்று ஏறினோம்.
 
வேன் புறப்பட்டது. எங்கே செல்கிறது இந்த வேன். அந்தி சாயும் வேளையில் குளியல் உடையுடன் எங்கு சென்றோம்.. எங்கள் ஒவ்வொருவருகும், அது ஒரு அருமையான அனுபவம். அடுத்த வாரம் விவரிக்கிறேன்..
 
– அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்
 

From around the web