குரு பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் எப்போது  வெற்றி அடையும்?

 

இதுவரை 3மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020க்குப் பிறகு 4மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். கடனுதவி கிடைக்கும்.

6-4-2021க்குப் பிறகு  குரு 5மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது.இந்தக் காலக்கட்டத்தில் திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

19-11-2020 முதல் 06-01-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் லாபஸ்தானதிபதி ஆகிறது. எனவே இக்காலக் கட்டத்தில் பணவரவு பலவகைகளில் ஏற்படும். நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். 

குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 1மிடத்து அதிபதி ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.

குரு 07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. செவ்வாய் 2 மற்றும் 7ம் வீட்டு அதிபதி ஆகும். பண்வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். நிதி நிலை உயரும்.ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 8மிடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில காரியத்தடைகள் ஏற்படும். மனக்கவலை அதிகரிக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். 

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வர செல்வம் பெருகும்

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews

From around the web