சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இது வரை 6மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 7மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது.இந்தக்காலக்கட்டத்தில் உடலநலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் நிலவும்.
6-4-2021 முதல் குரு 7மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக்காலக்கட்டத்தில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிரயாணம் ஏற்படும். கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் போட்டி காணப்பட்டாலும் லாபம் குறையாது.
குரு சஞ்சரிக்கும் நட்சத்திர சாரப்பலன்கள்
குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். இது வரை நஷ்டத்த்தில் இயங்கி வந்த தொழில்கள் லாபம் ஈட்ட ஆரம்பிக்கும். எல்லாமும் நன்மையாகவே நடைபெறும்.
குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 12மிடத்து அதிபதி ஆகையினால் தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். சில நஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். சுப விரயம் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். புது சூழ்நிலையில் வாழ நேரிடும்.
குரு 07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. செவ்வாய் 4, 9க்குரியது. ஆகையினால், ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 10மிடத்தில் இருப்பதினால் அசையும், அசையா சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.
பரிகாரம்: பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவனை வழிபட்டால் பிரச்சனை விலகி ஓடும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews
