மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வர். குழந்தைகளினால் செலவினங்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும்.
பங்குச் சந்தை லாபம் தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஓரளவுக்கு லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சாதகமான நாட்கள் : 3,6, 7
