மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுபச்செலவு ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் 4ம் தேதிக்குப் பிறகு சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மீனம்மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

சுபச்செலவு ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் 4ம் தேதிக்குப் பிறகு சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் முன்னேற்றம் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். 

சந்திராஷ்டமம் : 6, 7  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 1, 2, 4

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – மீனம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web