ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களும், நண்பர்களும் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். சில பதவிகள் பறிபோகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். இடமாற்றமும், பிரயாணமும்
 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களும், நண்பர்களும் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். சில பதவிகள் பறிபோகும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேறமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 

சாதகமான நாட்கள் : 21, 22, 23

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web