ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் சுமாராக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் ஈட்டுவர். ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்க. தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. சில கடன்கள் நெருக்கடி தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும்.
திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் ஓரளவுக்கு நன்மை தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
சந்திராஷ்டமம் : 22, 23 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 17, 19, 22
