ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலத்தில் கவனம் தேவை. மனதில் அமைதிக் குறைவு காணப்படும். காரியத் தடை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சேதி வந்து சேரும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டு வியாபாரம் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது.
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டத்தைத் தரும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். முதலீடுகள் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 25, 26, 27 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 25, 29, 30
