ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும்.
பயிர்த்தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை சிறிது நன்மை தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும்.
ரேஸ், லாட்டரி லாபம் தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் நன்மையாக நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்ப்ந்தக்காரர்கள் நன்மை அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 27, 29, 30
