ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை மிகுந்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு குறையும். சிலருக்கு பதவி பறிபோகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் சில சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருக்கிற பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னிகன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை மிகுந்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு குறையும். சிலருக்கு பதவி பறிபோகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் சில சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருக்கிற பணம் வந்து சேரும். 

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது.

பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் குழப்பம் உண்டாகும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

சந்திராஷ்டமம் : 24  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

சாதகமான நாட்கள் : 24, 26, 29

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web