கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியினால் திருமணம், குழந்தை பாக்கியம் இருக்காமே!!

 

இது வரை 4மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 5மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

6-4-2021க்குப் பிறகு குரு 6மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். 

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

19-11-2020 முதல் 06-01-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது.சூரியன் விரயங்களுக்கானதிபதி  ஆகையினால் விரயத்தைத் தரும். அதுவும் சுபவிரயத்தைத் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மீது முதலீடுகள் செய்ய நேரிடும். வீடு, வாகனம் செலவீனங்களைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். 

குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டதில்  பல வகைகளில் பண வரவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நல்ல லாபம் தரும். பயிர்த் தொழில் செழித்தோங்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். 

குரு 07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது.இந்தக் காலக்கட்டம் சோதனை நிறைந்ததாக இருக்கும். மனக்கவலை அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படும். சில கடன்கள்  கவலையைத் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது நிதானம் தேவை. அதே சமயத்தில் உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தவிர்ப்பது நலம்.

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 9மிடத்தில் இருக்கிறது.எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.பிரயாணத்தில் கவனம் தேவை. மனம் சஞ்சலமடையும். பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல வீடுகளில் அமர்ந்து இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

பரிகாரம் : புதன்கிழமை தோறும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews

From around the web