குரு பெயர்ச்சி 2020! மிதுனம் ராசிக்காரர்களுக்கு பொற்காலம் காத்திருக்காமே!!

 

குரு 19-11-2020 முதல் 8மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குரு 7 மற்றும் 10மிடத்தி அதிபதியாகிறார். எனவே தொழில் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மதிப்பு, செல்வாக்கு சரியும். பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பதவி நீக்கத்திற்கு வாய்ப்புண்டு. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். இருப்பினும் 8மிடத்து குருவைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. குரு பயணிக்கும் நட்சத்திரம் நன்மையாக காணப்படுவதினால் மேற்கூறிய பலன்கள் நன்மையாகவே நடக்கும்.

6-4-2021க்குப் பிறகு குரு 9மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இக்காலம் வாழ்வின் பொற்காலம் எனலாம். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயநாட்டில் உத்தியோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

குரு 19-11-2020 முதல் 06-01-2021 வரை சூரியனுடைய நட்சத்திரமாகிய் உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கியமான ஆவணங்கள் கையெழுத்தாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். 

குரு 07-01-2021 முதல் 06-03-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமாகிய திருவோணத்தில் சஞ்சரிக்கிறது.  சந்திரன் 9மிடத்து அதிபதி ஆவார். இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

குரு 07-03-2021 முதல் 21-5-2021 வரையிலும், 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமாகிய அவிட்டத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு இராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 12மிடத்தில் சஞ்சரிப்பதினால் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து நல்ல சேதி வரும். தொழில் தொடங்க வங்கியில் கடன் வாங்க வேண்டியது வரும். பிறப்பு ஜாதகத்தில் ராகு நல்ல வீடுகளில் அமர்ந்து இருந்தால் மிக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர சுகமான வாழ்வு அமையும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews

From around the web