குரு பெயர்ச்சி 2010! மீனம் ராசிக்காரர்களுக்கு மதிப்பு செல்வாக்கு உயருமாம்!!

 

இது வரை விரயஸ்தானமான 10மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு 19-11-2020 முதல் 11மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குரு 1மிடம் மற்றும் 10மிடத்து அதிபதி ஆகும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

6-4-2021 முதல் குரு 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். 

குரு சஞ்சரிக்கும்  நட்சத்திர சாரப்பலன்கள்

19-11-2020 முதல் 6-1-2021 வரை குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் 6மிடத்து அதிபதி ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் கொட்டம் அடங்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

குரு 7-1-2021 முதல் 6-3-2021 வரை சந்திரனுடைய நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிக்கிறது. சந்திரன் 5மிடத்து அதிபதி ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும்.

குரு 7-3-2021 முதல் 21-5-2021 வரையிலும் மற்றும் 21-7-2021 முதல் 20-11-2021 வரையிலும் செவ்வாயினுடைய நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கிறது. செவ்வாய் 2மிடம் மற்றும் 9மிடத்து அதிபதி ஆகும்.. இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். குடுமப்த்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். தொழில் சம்மந்தமான முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

21-5-2021 முதல் 21-7-2021 வரையிலும் குரு ராகுவினுடைய நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிக்கிறது. ராகு 3மிடத்தில் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இடமாற்றம் உண்டாகும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும்.  சில குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். இளைய சகோதரர்களினால் நிம்மதி கெடும். பிரயாணத்தின் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனம் தேவை.

பரிகாரம் : ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசித்து வர தீமைகள் அகன்று நன்மைகள் கிடைக்கும்

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

A1TamilNews

From around the web