வேலை வாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி.. பிப்ரவரி 7ம் தேதி டெல்லியில் திரள்கிறார்கள்!

டெல்லி : பிப்ரவரி 7ம் தேதி, கல்வி மற்று வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன் வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் பேரணி நடத்துகிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஜவகர்லால் நேரு மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாய் பாலாஜி இது குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார். “விவசாயிகள் போலவே, இளைஞர்களுக்கு பிரதமரின் பொய் வாக்குறுதிகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல போகிறோம். எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புகளும்
 
வேலை வாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி.. பிப்ரவரி 7ம் தேதி டெல்லியில் திரள்கிறார்கள்!
டெல்லி : பிப்ரவரி 7ம் தேதி, கல்வி மற்று வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன் வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் பேரணி நடத்துகிறார்கள். 
 
நாடு முழுவதும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஜவகர்லால் நேரு மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாய் பாலாஜி இது குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.
 
“விவசாயிகள் போலவே, இளைஞர்களுக்கு  பிரதமரின் பொய் வாக்குறுதிகளை  உலகத்திற்கு எடுத்துச் சொல்ல போகிறோம். எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புகளும் மறுக்கப் பட்டுள்ளது. இது பற்றி கேட்டால் எங்களை தேச விரோதிகள் என்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். இப்போது இந்த அரசை கேள்வி கேட்க, ஒற்றுமையாக திரள்கிறோம். இளைய இந்தியாவின் அதிகாரப் பேரணி செங்கோட்டையிலிருந்து பாராளுமன்றம் வரையிலும் செல்லும்” என்று சாய் பாலாஜி கூறியுள்ளார்.
 
“காலியிடங்களை உடனே நிரப்புக. தேர்வு முறையில் முன்னதாகவே கேள்வித்தாள் வெளியாவதைவும் ஊழலையும் தடுக்க வேண்டும். பட்ஜெட்டில் 10 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில், மாணவர் எண்ணிக்கை குறைப்பு, நிதி குறைப்பு, கட்டண அதிகரிப்பு, இட ஒதுக்கீடு குறைப்பு என அனைத்தையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்,” போன்ற கோரிக்கைகளை இந்த பேரணியில் முன் வைத்துள்ளனர்.
 
கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்குறுதியுடன் ஆட்சியைப் பிடித்தார் பிரதமர் மோடி. டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி-க்குப் பிறகு சிறு தொழில்களும் பாதிக்கட்ட நிலையில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் பேரணியைப் போல், இளைஞர்கள் பேரணியும் டெல்லியை உலுக்கப் போவதாக தெரிய வந்துள்ளது. 
 
 

From around the web