இனி 100, 112 எண்களை எந்த நெட்வொர்க்கிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம்!

காவல்துறை அவசர அழைப்பு எண் 100 ஆக இருந்தது. லேண்ட்லைன் மற்றும் எந்த நிறுவனத்தின் மொபைல் எண்ணிலிருந்தும் இலவசமாக அழைக்கும் வகையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் BSNL நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப கோளாறால் Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிலிருந்து காவல் கட்டுப்பாடு அறையைத் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருந்து வந்தன. மாற்று ஏற்பாடாக இதுவரை பொதுமக்கள் 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய இலவச அழைப்பு எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது BSNL
 

இனி 100, 112 எண்களை எந்த நெட்வொர்க்கிலிருந்தும் இலவசமாக அழைக்கலாம்!காவல்துறை அவசர அழைப்பு எண் 100 ஆக இருந்தது. லேண்ட்லைன் மற்றும் எந்த நிறுவனத்தின் மொபைல் எண்ணிலிருந்தும் இலவசமாக அழைக்கும் வகையில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் BSNL நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப கோளாறால் Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிலிருந்து காவல் கட்டுப்பாடு அறையைத் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருந்து வந்தன.

மாற்று ஏற்பாடாக இதுவரை பொதுமக்கள் 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய இலவச அழைப்பு எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது BSNL நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் மற்ற நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இலவசமாக அழைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன என காவல்துறை அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web