லைகர் விலங்குடன் கயிறு இழுக்கும் போட்டி நடத்திய யுவராஜ் சிங்..! வைரல் வீடியோ

 
Yuvaraj-Singh

துபாயில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் பல்வேறு உயிரினங்களுடன் விளையாடி மகிழ்ந்த தருணத்தை கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

துபாயில் புகழ்பெற்ற ஃபேம் பார்க் என்ற விலங்கியல் பூங்காவுக்கு சென்ற யுவராஜ் மற்றும் நண்பர்கள் லைகர் எனப்படும் கலப்பின விலங்கிடம் கயிறு இழுக்கும் போட்டி நடத்தினர்.

மூவரும் எவ்வளவோ முயன்றும் அந்த விலங்கு அசைந்து கொடுக்கவே இல்லை. பின்னர் சிம்பன்ஸி, ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்த பின் கரடியுடன் செல்ஃபி எடுத்தும், மலைப் பாம்பினை தோளில் போட்டு போட்டோ எடுத்தும் மகிழ்ந்தார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web