இந்தியாவில் ஒமைக்ரான் உச்சம் அடையும் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை

 
Christopher-Murray

இந்தியாவில் ஒமைக்ரான் அலை அடுத்த மாதம் உச்சம் அடையும் என அமெரிக்க சுகாதார நிபுணர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது.  இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருகிறது. இவற்றில் இந்தியாவும் அடங்கும்.  இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என ஒன்றிய அரசு புதிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

எனினும், இந்தியாவில் ஒமைக்ரான் அலை அடுத்த மாதம் உச்சம் அடையும் என அமெரிக்க சுகாதார நிபுணர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகத்தின் சுகாதார அளவீட்டு அறிவியலின் தலைவரான டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே கூறும்போது, உலகத்தில் பல நாடுகளில் ஏற்பட்டதுபோல, ஒமைக்ரான் அலைக்குள் நீங்கள் நுழைய இருக்கிறீர்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் டெல்டா அலையில் ஏற்பட்ட உச்சம்போன்று, நாளொன்றுக்கு ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒமைக்ரான் சற்று கடுமை குறைவாகவே இருக்கும்.

அதனால், பாதிப்பு அதிக அளவிலும், சாதனை அளவாகவும் இருக்க கூடும். நோய் பாதிப்பு கடுமை குறைவாக இருக்கும்.  அதுபற்றி பின்னர் நாங்கள் அறிவிப்போம். உச்சம் அடையும்போது, 5 லட்சம் எண்ணிக்கை இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது அடுத்த மாதம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

From around the web