தடுப்பூசியை புறக்கணித்த பிரபல இரட்டையர்களுக்கு நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

 
France-twins-died-in-corona

பிரான்சில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்து பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பிரபல இரட்டையர்களும், முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான கீரிச்கா மற்றும் இகோர் போக்டானோஃப் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை தமக்கு பாதுகாப்பை கொடுக்கும் என்று தெரிவித்து தடுப்பூசிகளை புறக்கணித்து வந்த அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கீரிச்கா டிசம்பர் 28-ம் தேதி உயிரிழந்தார். ஆறு நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 3-ம் தேதி அவரது சகோதரர் இகோர் போக்டானோஃப் என்பவரும் பிரான்சில் உள்ள ஜார்ஜஸ்-பாம்பிடோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இருவரின் இறப்புக்கான காரணத்தை அவர்களது உறவினர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர்களது வழக்கறிஞர் எட்வார்ட் டி லாமேஸ், இருவரின் மரணத்திற்கு காரணம் கொரோனா என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

72 வயதான இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web