கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

 
Joe-Biden-3rd-dose

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டனர். இதனால் கொரோனா வைரஸ் தங்களை தாக்காது என்ற நம்பிக்கையில் இருந்தனர். அப்போதுதான் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அங்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், 78 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்திக் கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பூஸ்டர் போடப்பட்ட வீடியோ மற்றும் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன் டிசம்பர் முதல் டோஸும்), ஜனவரி மாதம் 2-வது டோஸும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web