அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!!

 
Denver-shooting

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள இடத்திற்கு சென்ற அந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

Denver-shooting

ஆனாலும், அந்த நபர் நடத்திய இந்த தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? என்பது குறித்தும் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web