இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்

 
Borris-Johnson-Mother

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் காலமானார். அவருக்கு வயது 79.

தொழில்முறை ஓவியரான சார்லட் ஜான்சன் வால், கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

குடும்பத்தின் உச்ச அதிகாரம் கொண்டவர் தமது தாயார் என பிரதமர் ஜோன்சன் பலமுறை குறிப்பிட்டிருந்தார். அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இரங்கள் செய்தி பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் ஜோன்சனின் தந்தையான ஸ்டான்லியை 1963-ல் சார்லட் ஜான்சன் வால் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 1979-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் 16 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒருமுறை சார்லட் உளவியல் பாதிப்புக்கு இலக்கானதுடன், சுமார் 9 மாத காலம் உளவியல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

Borris-Mother

பிரதமர் ஜோன்சன் உட்பட நான்கு முக்கிய பிரபலங்களுக்கு சார்லட் தாயாரானார். பல்கலைக்கழகங்களுக்கான முன்னாள் அமைச்சர் ஜோ, பத்திரிகையாளர் ரேச்சல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சாரகர் லியோ ஆகியோர்கள் சார்லட்டின் பிள்ளைகள் ஆவார்கள்.

1988-ல் அமெரிக்க பேராசிரியர் நிக்கோலஸ் வால் என்பவரை திருமணம் செய்து கொண்டு சார்லட் நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 40 வயதில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டும் தொழில்முறை ஓவியராக தமது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web