இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 53 வீரர்கள் வீரமரணம்.. கடைசியாக பாடிய பாடல்.. உருக வைக்கும் வீடியோ !

 
இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 53 வீரர்கள் வீரமரணம்.. கடைசியாக பாடிய பாடல்.. உருக வைக்கும் வீடியோ !

இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாயமானது. அதன்பின்னர் கப்பலை தொடர்பு கொள்ள முடியததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.

இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தேடுதல் வேட்டையை கடற்படையினர் தொடங்கினர். அவர்களை தேடும் பணியில், 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

இதுதவிர அந்நாட்டிற்கு உதவும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் இறங்கின.

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர். இதனையடுத்து இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது.
 
இந்நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறது. இதனால் அந்த நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

நீர்மூழ்கி கப்பலில் அவர்கள் சென்றப்போது கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழுவாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை உயிரிழந்த வீரர்கள் உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .


 


 

From around the web