குவைத்தில் தப்பித்த சிங்கத்தை அலேக்காக தூக்கிச் சென்ற சிறுமி!! வைரலாகும் வீடியோ!

 
kuwait-girl-catches-carries-escaped-lion-viral-video

குவைத்தில் தெருக்களில் சுற்றித் திரிந்த சிங்கத்தை சிறுமி ஒருவர் பிடிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் வளைகுடா நாடுகளில் சகஜமாக காணப்படுகிறது. காட்டையே நடுங்க வைக்கும் சிங்கங்களும் அதன் உரிமையாளர்களைக் கண்டால் பூனையாக மாறிவிடுகின்றன.

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுத்தைக் குட்டி 6 ஆயிரம் டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் 4.5 லட்சம் ரூபாய்) வரை விலை போகிறது. இதனை வளர்ப்பவர்கள் சாதாரண செல்லப்பிராணி போல் அவற்றை தங்கள் வீடுகளில் வைத்து வளர்க்கின்றனர்.

இந்த ‘செல்லப்பிராணிகள்’ தொடர்பான வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களைக் கவர்கின்றன. அந்த வகையில் தற்போது குவைத் நாட்டில் தெருவில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டியை ஒரு சிறுமி அலேக்காக தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி, அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த சிறுமி, அந்த சிங்கம் சாலையில் சுற்றித்திரிவதை கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web