ரஷ்யாவில் கயிற்றின் மீது நடக்கும் போது தவறி விழுந்த சர்க்கஸ் ஊழியர்.. பார்வையாளர்கள் அதிர்ச்சி!

 
Russia

ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியில், கயிற்றின் மீது நடந்தவர் திடீரென தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ரஷ்யாவின் சைபீரிய நகரமான ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது முக்மத் சுவன்பேகோவ் என்பவர் தனது தாயாரை தலைமீது நிற்க வைத்தபடி கயிற்றில் நடந்து சென்றார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் முக்மத்தின் கால் நிலைதடுமாறியது. அடுத்த சில நொடிகளில் அவர் சுமார் 24 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

From around the web