விமான நிலையம் செல்லும் சாலையில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல்..! 8 பேர் பலி!!

 
car-bomb-in-somali-capital

சோமாலியாவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடன சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் விமான நிலையம் செல்லும் சாலையில் இந்த பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏவிசன் தெருவில் குண்டு துளைக்காத கார்கள் உட்பட கான்வாய் வாகனங்களை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி அப்திரஹ்மான் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கான்வாய் யாருடையது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சம்பவயிடத்திலிருந்து 8 உடல்களை எடுத்து சென்றோம் என கூறினார்.

car-bomb-in-somali-capital

மேலும், இத்தாக்குதலில் சுமார் 4 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவயிடத்தில் இருந்த கார்கள் உட்பட வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதடைந்துள்ளன.

தற்போது வரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் குழு இது போன்ற தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web