டெஸ்லா நிறுவனத்தில் கலக்கும் தமிழர்..! யார் இந்த அசோக் எல்லுசாமி? குவியும் வாழ்த்துக்கள்

 
Ashok-Ellusamy

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ குழு பைலட் குழு தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த அசோக் எல்லுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர் பதவியில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது உலகின் முன்னணி கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியதாக உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அசோக் எல்லுசாமி தற்போது டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ மொபைலஸ் குழு தலைவராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்கும் என்ற ட்விட்டர் அறிவிப்பின் மூலம் தேர்வான முதல் நபர் தான் அசோக்.

இந்த பதிவின் மூலம் அசோக் எல்லுசாமி டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவில் தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அசோக் எல்லுசாமிக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

From around the web