உணவில் எலியின் கண்கள்.. சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி!

 
Spanish-man-eats-rat-he-thought-was-an-artichoke

ஸ்பெயினில் இளைஞர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகளில் இறந்த எலியின் கண்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் வசித்து வருபவர் ஜுவான் ஜோஸ். இவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காய்கறிகளை வாங்கியுள்ளார். இதையடுத்து சாப்பிட தனக்கு தேவையான காய்கறிகளை கொண்டு சமைத்துள்ளார்.

சமைத்த உணவினை ஒரு தட்டில் வைத்து சாப்பிடும் போது எதோ கருப்பாக இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டுள்ளார். அப்போது எதோ சாப்பிட கூடாத உணவை சாப்பிட்டதை உணர்ந்த ஜுவான் ஜோஸ் அதன் பிறகு தட்டில் இருந்த கண்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் காட்டிய போது அது இறந்து போன எலி என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளில் எலி இருந்ததை பார்க்காமல் அப்படியே சமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகத்திடம் ஜுவான் ஜோஸ் புகார் கொடுத்துள்ளார். மேலும் தனது உணவில் கிடந்த எலியின் கண்களை புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.    

From around the web