தண்டவாளத்தில் ஓடிய காரால் பயணிகள் ரயில் தாமதம்... காரை இயக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை.!

 
England

இங்கிலாந்தில் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்றவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஹேண்ட்ஸ்வொர்த் நகரை சேர்ந்த 31 வயதான ஆரோன் என்பவர் கடந்த மே மாதம் தனது மிட்ஷிபிஷி வாகனத்தை டட்ஸ்டன் ஸ்டேஷனில் ஒரு கேட் வழியாக ஓட்டிச் சென்று ஆஸ்டனை நோக்கி ரயில் பாதையில் அரை மைல் பயணம் செய்தார். பின்னர் அவர் தண்டவாளத்தின் குறுக்கே வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Aaron

இந்த நிகழ்வு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதன் காரணமாக அதே வழியில் செல்லும் பயணிகள் ரயில் 8 மணி நேரம் தாமதமாகச் சென்றது.

இதையடுத்து அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆரோனுக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனையும், 23 ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டது.


 

From around the web