தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்

 
Antony-Blinken

ஹக்கானி தீவிரவாதிகள் மற்றும் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில், ஆப்கனில் தாலிபன்களின் வெற்றி குறித்து அவர் விளக்கம் அளித்தார். ஆப்கனில் பாகிஸ்தானின் தலையீட்டை அமெரிக்கா எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு அப்போது பதிலளித்த அவர், ஆப்கனை பொறுத்தவரை, அமெரிக்காவின் நலனுக்கு எதிரான பல கொள்கை விருப்பங்களை பாகிஸ்தான் கையாள்வதாக குற்றம் சாட்டினார்.

ஆப்கனில் முந்தைய ஆட்சியின் போது இந்தியா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் தற்போது அங்கு சில பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆன்டனி பிளிங்கன் கூறினார்.

தாலிபன் அரசுக்கு ஏதாவது சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து பாகிஸ்தான் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

From around the web