ஒமைக்ரான் சாதாரண ‘பருவகால குளிர் வைரஸ்’ தான்.. யாரும் பயப்பட தேவையில்லை! அமெரிக்க விஞ்ஞானி தகவல்

 
Afshine-Emrani

கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய ஒமைக்ரான் மாறுபாடு பருவகால வைரஸ் என்றும் யாரும் பயப்பட தேவையில்லை என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் மாறுபாட்டால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது 100 மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் சில நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல இருதயநோய் நிபுணர் அஃப்ஷைன் இம்ரானி, ஒமைக்ரான் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது ஒமைக்ரான் மாறுபாடு என்பது ‘பருவகால குளிர் வைரஸ்’ தவிர வேறொன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாடுகள் ஒமைக்ரான் மாறுபாட்டை சோதனை செய்யக்கூடாது என்றும் அதற்கு பதிலாக மக்களுக்கு நிதி உதவி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க நம்மால் முடியாது. முகக்கவசம் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் போன்றவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

தென்னாப்பிரிக்காவை போலவே ஐரோப்பா, அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் திரும்பி வருவதற்கு முன் பயணிகளை வேறொரு நாட்டில் தனிமைப்படுத்தச் சொல்வது வேடிக்கையானது என்று குறிப்பிட்டுள்ளார். 

From around the web