அமெரிக்காவில் கடத்தப்பட்ட குழந்தை போராடி மீட்ட தாய்..! வைரல் வீடியோ!!

 
USA

அமெரிக்காவில் தாயுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தையை, இளைஞர் காரில் கடத்த முயன்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டோலோரஸ் டயஸ் என்ற அந்த பெண் தமது 3 குழந்தைகளுடன் நடந்து சென்றபோது, அருகே காரில் இருந்து இறங்கிய ஜேம்ஸ் மெகோனகல் என்ற 24 வயது இளைஞர், திடீரென 5 வயது குழந்தையை தூக்கிச் சென்று, காரின் பின்இருக்கையில் திணித்தார்.

இதனால் டோலோரஸ் டயஸ் அதிர்ச்சியடைந்தபோதும் உடனே ஓடிச்சென்று, முன்பக்க கதவு கண்ணாடி வழியாக, குழந்தையை வெளியே இழுத்து காப்பாற்றினார். எனினும், காரில் தப்பிய இளைஞரை, சிசிடிவி காமிராவில் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.


 

From around the web