இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர்... அமெரிக்க அதிபர் முடிவு

 
Biden-Eric

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

இந்திய பிரதமர் மோடியுடன் சமீபத்தில் பேசிய ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி ஜோ பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

From around the web