அமெரிக்காவில் கபசுர குடிநீர்! 300 கிராம் 30 டாலர்கள் தான் ஜென்டில்மேன்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தாலும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருப்பது தமிழகத்தில் தான். கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலேயே கபசுர குடிநீர் பிரபலமடையத் தொடங்கியது. இலவசமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளிலும் மாத்திரை மருந்துகளுடன், கபசுர குடிநீரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது சித்த மருத்துவ முறையில் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கபசுர குடிநீர் அமேசான் இணையத்தளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. 100 கிராம் பாக்கெட்டுகள்
 

அமெரிக்காவில் கபசுர குடிநீர்! 300 கிராம் 30 டாலர்கள் தான் ஜென்டில்மேன்!இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தாலும் உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருப்பது தமிழகத்தில் தான். கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலேயே கபசுர குடிநீர் பிரபலமடையத் தொடங்கியது. இலவசமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளிலும் மாத்திரை மருந்துகளுடன், கபசுர குடிநீரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது சித்த மருத்துவ முறையில் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவிலும் கபசுர குடிநீர் அமேசான் இணையத்தளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. 100 கிராம் பாக்கெட்டுகள் 3 சேர்த்து ஒரே பாக்கெட்டாக விற்பனை செய்கிறார்கள். 29 டாலர்கள் 99 செண்ட்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவசமாக அமெரிக்கா முழுவதும் டெலிவரி செய்கிறார்கள்.

அமெரிக்கத் தமிழர்கள் மத்தியிலும் கபசுர குடிநீர் பிரபலமடைந்துள்ளது. ஊரிலிருந்து வாங்கி கூரியர் மூலம் பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அமேசான் இணையத்தளம் மூலம் கிடைப்பதால், பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

A1TamilNews.com

 

 

From around the web