கமலா ஹாரிசிடம் அதிகாரத்தை தற்காலிகமாக ஒப்படைத்த ஜோ பைடன்..! என்ன காரணம்?

 
JoeBiden-Kamala

அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக ‘கொலோனோஸ்கோபி’ எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதற்ககாக அவருக்கு அனஸ்திசியா (மயக்க மருந்து) கொடுக்கப்படும். இதனால்,  அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம், ஜோ பைடன் ஒப்படைக்க  உள்ளார்.

இந்தத் தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

From around the web