எனக்கு 18 வயது பெண் வேண்டாம்.. 83 வயது போலாந்து நாட்டு பெண்ணை மணந்த 28 வயது இளைஞர்..!

 
Pakistani-guy-married-83-old-poland-women

பாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான இளைஞன், 83 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹபீஸ் முகமது நடீம் (வயது 28) என்ற இளைஞரும், போலந்து நாட்டை சேர்ந்த ப்ரோமா (வயது 83) என்ற பெண்ணும் ஃபேஸ்புக் மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பானார்கள். இருவருக்கும் 55 வயது வித்தியாசம் உள்ள நிலையில் இந்த நட்பானது காதலாக மாறியது.
 
இந்த 6 ஆண்டில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இருவருக்குமே தங்களின் தாய் மொழி மட்டுமே தெரிந்த நிலையில் ஆங்கிலம் பேச தெரியாது. இதையடுத்து மொழிபெயர்ப்பு செயலி மூலமே இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டனர்.

இந்த நிலையில் முகமது - ப்ரோமா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ப்ரோமா விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

முகமதை மணப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ப்ரோமோ தனது பெயரை பாத்திமா என மாற்றி கொண்டார். இந்த நிகழ்வின் போது பாத்திமா தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார்.

Pakistani-guy-married-83-old-poland-women

மேலும் இஸ்லாமிய சட்டப்படி மனைவியாகும் மணப்பெண்ணுக்கு, மணமகன் கட்டயமாக ஒரு கட்டணத்தை பணமாக கொடுக்க வேண்டும், அதை பாத்திமாவுக்கு முகமது கொடுத்தார்.

முகமது ஐந்து நாட்களுக்கு முன்னர் 18 வயதான உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு பாத்திமாவை மணந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டிருந்தோம்.

விசா பிரச்சனைகள் தொடர்பாக திருமணம் நடந்ததா என்று கேட்கிறார்கள், எனக்கு சொந்த தொழில் இருப்பதால் அப்படி எதுவும் இல்லை என கூறினார். பாத்திமா கூறுகையில், நான் அவரை பற்றிய அனைத்து விஷயங்களையும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

From around the web