இந்தியாவுக்குப் போகாதீங்க! அமெரிக்காவின் எச்சரிக்கை!!

 
இந்தியாவுக்குப் போகாதீங்க! அமெரிக்காவின் எச்சரிக்கை!!

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க உள்துறை சார்பில் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் எண் 4 ஐ அறித்துள்ள அமெரிக்கா, கொரோனா, குற்றங்கள், தீவிரவாதம் போன்ற காரணங்களுக்காக இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு லடாக் பகுதியைத் தவிர ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம், அங்கே தீவிரவாதமும் மக்களுக்கிடையே அமைதியின்மை நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயுத தாக்குதல்களுக்கு வாய்ப்பு இருப்பதால் அந்தப் பகுதியிலும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளின் அதிக பட்ச எண்ணான 4 அறிவிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web