உங்களுக்கு தொண்டை புண் இருக்கா..? அப்போ ஒமைக்ரானா கூட இருக்கலாம்..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

 
Thoart-pain

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது. கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன.

இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும் வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குமட்டல் மற்றும் பசியின்மை என்ற இரண்டு அறிகுறிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல், பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்று அதிகப்படியான சோம்பலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒமைக்ரான் மாறுபாட்டின் நான்காவது பொதுவான அறிகுறியாக தொண்டை புண் விளங்குகிறது. தலைவலி பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால் இது ஒமைக்ரானின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு ஆளாகியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் ஒமைக்ரான் தொடர்பான நோய்த்தொற்றுகள் மிகவும் லேசானவை, இந்த தொற்றினால் பாதிக்கப்படும்போது தொண்டை பிரச்சினைகள், பசியின்மை போன்ற பொதுவான பலவீனம் இருக்கும்.

எனவே, ஒமைக்ரானின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். தீவிரம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும்.

From around the web