எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 11ண கல்லறைகள் கண்டுபிடிப்பு..!

 
எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 11ண கல்லறைகள் கண்டுபிடிப்பு..!

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்து நாட்டில் நைல் நதிப்படுகையில் உள்ள கோயும் எல் குல்கான் என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அப்போது பெரிய பாறையில் வெட்டி அமைக்கப்பட்ட கல்லறைகளைக் கண்டனர். அதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை 110 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்தக் கல்லறையின் காலம் கிமு 6000 முதல் கிமு 3150-க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைகள் அனைத்தும் ஒவ்வொரு வடிவிலும் அச்சில் வார்த்தார் போல இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

From around the web