மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

 
Borris-Johnson

இங்கிலாந்து சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியான சூழலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்திற்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்பும் கொரோனா தொற்று உறுதியானது.  இதனால், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தி கொண்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிக்சை பெற்று பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.  இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போதும் கொரோனா அதிகமாக உள்ளது.  நேற்று முன்தினம் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16-ந் தேதி சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்துடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தினார்.  இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஜாவித்துக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.

இதனால், கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதால் மிக லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

From around the web