சீக்கிய டாக்சி ட்ரைவர் மீது தாக்குதல்! விசாரணையை துரிதப்படுத்தும் நியூயார்க் போலீஸ்!

 
NY Taxi

அமெரிக்காவின் மிக முக்கியமான விமான நிலையமான நியூயார்க் ஜான் எஃப்.கென்னடி விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி சீக்கிய டாக்சி டிரைவர் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டார். தலையில் அணிந்திருந்த ட்ரபனையும் இழுத்து அவமானப்படுத்தியும் உள்ளார்.

நியூயார்க் நகரில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து அறிந்த இந்திய தூதரகம் சார்பில் அமெரிக்க நிர்வாகத்திற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்ததுடன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவை ஆய்வு செய்து வரும் போலீசார் மேலும் தகவல்களை திரட்டி வருகிறார். அந்த சீக்கிய டாக்சி டிரைவர் போலீஸை உடனடியாக அழைக்கவில்லை. சம்ப்வத்தை பார்த்த வேறு யாரும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீஸ் வரவில்லை. 

இத்தகைய வெறுப்புணர்வு அடிப்படையிலான குற்றச் செயல்கள் புரிவர்கள் மீது தகுந்த சட்ட ந்டவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் உள்துறை அமைச்சகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web