அமெரிக்காவில் அதிரடி அறிவிப்பு! தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் இலவசம்!!

 
Anheuser-Busch

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 29,69,12,892 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் பைடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் கையாண்டு உள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல்  தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொள்கிறார்.

From around the web