அமெரிக்கா தவறான பாதையில் செல்கிறது!எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிபுணர் !

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் எந்த வித ஊரடங்கும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படவும் இல்லை. அமெரிக்காவின் மெத்தனமான இந்தப் போக்கு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். அதன் படிஉலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகவும் பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா
 

அமெரிக்கா தவறான பாதையில் செல்கிறது!எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிபுணர் !சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் எந்த வித ஊரடங்கும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படவும் இல்லை. அமெரிக்காவின் மெத்தனமான இந்தப் போக்கு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் படிஉலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகவும் பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா கொரோனாவைக் குறித்து அச்சம் கொள்ளவில்லை. அதன் மக்களை தவறான பாதையில் வழிநடத்தி பலியிட்டுக் கொண்டிருக்கிறது.

தொற்றுநோய் குறித்து “தவறான திசையில்” சென்று கொண்டிருக்கிறது. பொது இடங்களில் அமெரிக்கர்கள் முககவசங்களை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். ஊரடக்கு தளர்வில் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.

இதுவரை ஏற்கனவே ஒருநாளைய பாதிப்பு 40000 பேராக இருக்கும் நிலையில் ,ஒருநாளைக்கு 1லட்சம் வரை உயரலாம் என எச்சரித்துள்ளார். பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தனி நபர் இடைவெளியையும், முகக்கவசம் அணிவதைவும் அமெரிக்கா தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

A1TamilNews.com

From around the web