உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 18 வயதுடைய மாணவனை கைது செய்த போலீஸ்!

 
Texas

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சில மணிநேரங்களுக்கு முன் நடந்த சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளியில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேர் மாணவர்கள் ஆவர்.  வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 15 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Texas

இந்த தாக்குதலில் கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், சம்பவ பகுதியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த பள்ளியை மான்ஸ்ஃபீல்ட் ஐஎஸ்டி இயக்குகிறது. ஆர்லிங்டன் உதவி போலீஸ் தலைவர் கெவின் கோல்பியே கூறுகையில், வகுப்பறையில் நடந்த சண்டையின் போது துப்பாக்கி சூடு நடந்தது என்று கூறினார்.

Simpkins

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 வயதுடைய நபர் என கண்டறியப்பட்டு உள்ளது.  திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

From around the web