மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகம் செய்த சீனா..!

 
China

சீனாவில் விமான வேகத்திற்கும் கூடுதலான வேகத்துடன் பயணிக்கும் உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் (சி.ஆர்.ஆர்.சி.) நிறுவனம் உலகின் அதிவேக ரெயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.  இதில், மேக்லெவ் ரயிலை உருவாக்கி உள்ளது.

இந்த ரயில் குயிங்டோவ் நகரின் கிழக்கு கடலோர பகுதியில் வைத்து இயக்கப்பட்டது.  இதன் வேகம் மணிக்கு 600 கி.மீ. அல்லது 373 மைல் ஆகும். இந்த ரயில்கள் 2 ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு ஜோடி, ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து விலக்கி ரெயிலை மேலே உயர்த்த உதவும்.

இந்த மேக்லெவ் ரயிலானது பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரை 2.5 மணிநேரத்தில் கடந்து செல்லும். இதே தொலைவை அதிவேக ரயிலானது கடந்து செல்ல 5.5 மணிநேரமும், விமானம் 3 மணிநேரமும் எடுத்து கொள்கிறது.

From around the web