4 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்..! 30 வருடத்திற்கு பிறகு தாயுடன் இணைந்த மகன்.. சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

 
Chinese-Boy-Reunited-with-Family-after-30-years

சீனாவில் 4 வயதில் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவர் 30 வருடத்திற்கு பிறகு தனது தாயுடன் சேர்ந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் உள்ள யுன்னான் பகுதியில் வசித்து வரும் பெண்மணிக்கு 4 வயதில் லீ ஜிங்விய் என்கின்ற மகன் உள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு அந்த பெண் தனது மகனை லான்கோ பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது லீயை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் 4 வயதில் கடத்தப்பட்ட லீ ஜிங்விய் சுமார் 30 வருடத்திற்கு பிறகு தனது தாயுடன் இணைந்துள்ளார்.

30 வருடத்திற்கு பிறகு தனது குடும்பத்துடன் சேர காரணமாக இருந்தது அவரது நினைவாற்றல் தான். சிறுவயதில் தனது ஊர் எப்படி இருந்தது குறித்து அப்படியே ஒரு காகிதத்தில் வரைந்து காவல் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.

Chinese-Boy-Reunited-with-Family-after-30-years

போலீஸ் அந்த வரைபடத்தை வைத்து அவருடைய ஊரையும், குடும்பத்தையும் கண்டுபிடித்தனர். பிறகு மரபணு பரிசோதனையில் தாய்-மகன் உறவு உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து லீ ஜிங்விய் கூறியதாவது, எனது ஊர் நான் வரைந்தது போலவே இருக்கிறது. எனக்கு சிறிய வயதில் இருந்து வரையும் பழக்கம் இருந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. குடும்பத்தில் உள்ள அனைவரின் முகமும் எனக்கு ஞாபகம் இருக்கு. 30 வருடங்களுக்கு பிறகு முதல் முதலில் என் தாயுடன் பேசிய வீடியோ கால் மூலமே நான் கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

From around the web