18 வயது பெண்ணுக்கு இறந்து பிறந்த குழந்தை..! சுடுகாட்டில் உடலை புதைக்கும் போது தெரிந்த அதிர்ச்சி!!

 
Brazil

பிரேசிலில் கர்ப்பமாக இருப்பதை உணராமல் இருந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அது உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் ரோண்டோனியா மாகாணத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு இருமுறை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சமீபத்தில் அப்பெண் திடீரென வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது தான் அவர் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார், முன்னர் அவர் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர்களும் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்துள்ளனர்.

ஏழாவது மாதத்திலேயே குறைபிரசவத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து பிறந்துள்ளது என கூறி இறப்பு சான்றிதழும் வழங்கினர்.

இதையடுத்து சுடுகாட்டில் குழந்தையை புதைக்கும் வேலை நடந்து வந்தது. அதிகாலை 3 மணியளவில் சுடுகாட்டில் இருந்த நபர் குழந்தை மூச்சு விடுவதையும், அதற்கு இதயத்துடிப்பு இருப்பதையும் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்குழந்தையை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அகஸ்டஸ் என பெயரிடப்பட்டுள்ள குழந்தைக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, குழந்தையின் தாயாருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web