அமெரிக்காவில் 12 பேர் உயிருடன் தீயில் கருகிய சம்பவம்: வெளியான அதிர்ச்சியூட்டும் காரணம்!

 
philadelphia-apartment-fire-christmas-tree-boy

அமெரிக்காவில் 12 பேர் உயிருடன் தீயில் கருகி பலியான சோக சம்பவத்திற்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியாவில் கடந்த புதன்கிழமை ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிறிஸ்துமஸ் மரம் பற்றவைக்கப்பட்டதாலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மரம் எப்படி தீப்பிடித்தது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 12 உயிர்களை பலி வாங்கிய இந்த துயர சம்பவத்திற்கு 5 வயது சிறுவன் தான் காரணம் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

philadelphia-apartment-fire-christmas-tree-boy

சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மையப்புள்ளியாக வைத்து நடத்தப்பட்ட விசாணையில், 5 வயது சிறுவன் லைட்டருடன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.

அதேபோல் அந்த சிறுவன் இருந்த, கட்டிடத்தின் 2-வது மாடியில் தான் முதலில் தீப்பிடித்தது என்பதும் தெரிவந்தது. இவ்வாறு ​​பிலடெல்பியா தீயணைப்பு ஆணையர் ஆடம் தியேல் கூறியுள்ளார்.

விபத்து நடந்த குடியிருப்பில், குறைந்தது 7 தீ கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்துள்ளன. அவை எதுவுமே வேலை செய்யாததே விபத்தில் இத்தனை உயிர்கள் போனதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web