ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உலகத் தமிழ் அமைப்பு கோரிக்கை

அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு சாத்தான்குளம் வியாபாரிகள் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் சம்மந்தப்பட்டுள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மற்றும் கடமை தவறிய மற்ற துறையினர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், காவல்துறையின் துன்புறுத்தல்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உலகத் தமிழ் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் இரவிக்குமார் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்காவில் ஜார்ஜ் பிலாய்ட் காவல்துறையால் படுகொலை
 

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உலகத் தமிழ் அமைப்பு கோரிக்கைமெரிக்காவில் 30  ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு சாத்தான்குளம் வியாபாரிகள் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதில் சம்மந்தப்பட்டுள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மற்றும் கடமை தவறிய மற்ற துறையினர் மீதும் கொலை வழக்கு  பதிவு செய்ய வேண்டும், காவல்துறையின் துன்புறுத்தல்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உலகத் தமிழ் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் இரவிக்குமார் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அமெரிக்காவில் ஜார்ஜ் பிலாய்ட் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டார் என உலகெங்கும் பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் திரு. ஜெயராஜ், திரு. பெனிக்ஸ் ஆகிய தந்தை – மகன் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்துப் பல மணி நேரம் அடித்து மிகவும் கொடுமையான முறையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிக் கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி உலகத்தமிழர்களை பெரும் துயரத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

இருவரையும் இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றோம். அவர்களின் ஆன்மா அமைதியைத் தழுவ இறையை வேண்டுகின்றோம்.

காவல்நிலையத்தில் மனிதத்தன்மையற்ற முறையில் மிகவும் கொடுமையான துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, தந்தை – மகன் என இரட்டைக்கொலை செய்த அனைத்துக் காவலர்களையும், காவலர்களின் நண்பர்கள் ( Friends of Police ) எனும் அமைப்பினரையும், கடமை தவறிய மற்ற துறையினர் மீதும் அரசு கொலை வழக்குப் பதிவு செய்து, உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

‘காவலர்களின் நண்பர்கள்’ எனும் அமைப்பு முறையைத் தமிழ் நாட்டில் தடைசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களுக்கும் மனித நேயம் குறித்த பயிற்சியையும், மனநல மருத்துவர்கள் மூலம் கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்த வேண்டும். காவலர்கள் என்போர் பொதுமக்களுக்குக் காவல் புரியவும், அவர்களைப் பாதுகாக்கவும் பணியமர்த்தப்பட்ட ‘மக்கள் பணியாளர்’ என்பதையும், மக்களை மிகவும் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதையும் அரசு தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும்.

காவலர்கள் பணியில் ஈடுபடும் எல்லா நேரங்களிலும் அவர்களில் உடையில் கண்காணிப்புக் கருவிப் பொறுத்தப்பட்டு இயக்க நிலையில் இருக்க வேண்டும், அதனைக் கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; காவல்துறை தொடர்ந்து மனிதத்தன்மையற்ற முறையில் அடக்குமுறை செயல்களில் ஈடுபட்டு வருவது காவலர்கள் மட்டுமின்றி, ஆட்சியாளர்கள் மீதும் மக்களுக்கு வெறுப்புணர்வும், எதிர்ப்பும் வலுக்கும். ஒருவர் குறிப்பிட்டத் துறையின் ‘அரசு அதிகாரி’ என்று பெயர் இருப்பதை மாற்றி, அவர் அத்துறையின் ‘மக்கள் பணியாளர்’ என்று அரசாணை வெளியிட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் துன்புறுத்தல்களுக்கு ( சித்திரவதை ) எதிரான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள இந்திய ஒன்றிய அரசு, அதற்கு இணங்கக் காவல்நிலையத் துன்புறுத்தல் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டங்களை விரைவில் கொண்டுவர வேண்டும். திரைப்படங்களில் புகை, மது தொடர்பான காட்சிகளின்போது, விழிப்புணர்வு அறிவிப்புகள் வருவதுபோல, காவலர்களின் அத்துமீறல், அடக்குமுறை தொடர்பான காட்சிகளிலும் விழிப்புணர்வு அறிவிப்புகள் வரவேண்டும்.

மேலும், காவல்துறையின் இத்தகைய கொடுமைகளையும் – அடக்குமுறைகளையும் – அத்து மீறல்களையும் – மிரட்டல்களையும் கடந்து செல்லாது, இதுதான் இயல்பு என்று ஏற்காது, அரசியல் – சாதி – மதம் என்று அணுகாமல், அதிகார அடக்குமுறைக்கு எதிரான சட்டப் பாதுகாப்புக்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுத் துணிவுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

மக்களிடம் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொள்ளும் காவல்துறையையும், அனைத்து அரசு அதிகார அமைப்புகளுக்கும் கடுமையான கண்டங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய உலகத் தமிழ் அமைப்பு கோரிக்கை

சாத்தான்குளத்தில் நடைபெற்றது போன்ற கொடுமைகள் இனி நடக்கவே கூடாது என்பதை உறுதிப்படுத்த மிகவும் வலுவான சட்டங்கள் நிறைவேற்றுவதுடன், அவற்றைச் சரியாக நடைமுறையில் செயல்படுத்துவதற்கு ஆவணச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

A1TamilNews.com

 

From around the web